Skip to content
Home » தஞ்சை வாலிபர் மலேசியாவில் மரணம்…. உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை

தஞ்சை வாலிபர் மலேசியாவில் மரணம்…. உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று உடல்நலக்குறைவால் இறந்த தங்களின் மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் சர்க்கார்தோப்பு பகுதியை சேர்ந்த செல்வம். இவரது மனைவி கனகாம்பாள். இவர்களின் இளைய மகன் கார்த்திக் (24). குடும்ப வறுமையின் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கார்த்திக் மலேசியாவிற்கு வேலைக்காக சென்றார். அங்கு கார்த்திக்கிற்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

உடன் அவரை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி கார்த்திக் இறந்து விட்டார். இதுகுறித்த தகவல் காரத்திக்கின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த அவர்கள் கதறி அழுதனர். பின்னர் அவர்கள் கூறுகையில், குடும்ப வறுமையின் காரணமாக எங்கள் மகன் வெளிநாட்டு வேலைக்கு சென்றான். அங்கு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்ததாக கூறினார்கள். இந்த அதிர்ச்சியிலிருந்து எங்களால் மீளவே முடியாது.

எங்கள் மகன் முகத்தை நாங்கள் பார்க்க வேண்டும். எனவே மத்திய, மாநில அரசுகள் மலேசியா நாட்டில் உயிரிழந்த எங்கள் மகன் கார்த்திக்கின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *