தொடர் விடுமுறையால் தஞ்சை பெரிய கோயிலுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்றும் பெரிய கோவிலுக்கு காலையிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர்.மத்தியான வேளையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தஞ்சை மணிமண்டபம் பூங்காவிலும் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. அங்கு ஏராளமான சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வரத்து காணப்பட்டது.