மனிதவளம் மற்றும் சுற்றுச் சூழல் மலர்ச்சி அறக் கட்டளைச் சார்பில்உலக பார்வை தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் நிகழ்ச்சி நடந்தது. குருட்டுத் தன்மை தடுப்பு முன்னெடுப்பாக, பணியிடத்தில் பார்வையை பாதுகாப்பதில் கவனம் செலுத்துதல் என்ற கருப்பொருளுடன் கூடிய விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரம் சிற்பச் சாலை கலைஞர்கள், மர வேலைப்பாடு செய்வோர், வியாபாரிகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. முதல் பிரதியை திருநங்கை ரம்யா பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அறக் கட்டளை நிறுவனர் சபாபதி செய்திருந்தார்.