Skip to content

தஞ்சை எஸ்.ஐ பலி…..போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம்

  • by Authour

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு அண்ணாநகர் காமராஜர்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 59). இவருக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். கடந்த 1986-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த இவர், தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.வரும் ஜனவரியில் ஓய்வுபெற இருந்த அந்தோணிசாமி மாரடைப்பால் இறந்தார்.

அவரது உடல் நாஞ்சிக்கோட்டை ரோடு பாத்திமா நகரில் உள்ள கல்லறை தோட்டத்தில்  நல்லடக்கம் செய்யப்பட்டு 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு சஹ்னாஸ், மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, அரசு வக்கீல்கள் சத்தியமூர்த்தி, ஆறுமுகம், நீதிமன்ற அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!