தஞ்சாவூர் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் அரிக்கி (எ) அறிவழகன் (40) போலீசாரின் ரௌடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் மீது கொலை, அடிதடி, கஞ்சா உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர் கரந்தை புற்று மாரியம்மன் கோயில் அருகே வடவாற்றங்கரையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவு மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள்அறிவழகனை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
அறிவழகனுடன் சேர்ந்து மது அருந்தியவர்களையும் தற்போது காணவில்லை. தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் தான் அறிவழகனுக்கு மது வாங்கி கொடுத்து ஆட்களை வரவழைத்து கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள்.