தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை, புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் உதயச்சந்திரன்(32). திருமணமானவர். 2 குழந்தைகள் உள்ளனர். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 2 தினங்களுக்கு முன் விடுமுறையில் குடும்பத்தினரை பார்க்க சொந்த ஊருக்கு வந்து உள்ளார்.
இவர்களது, குழந்தைகள் 2 பேரும் பாட்டி வீட்டிற்குச் சென்ற நிலையில், வீட்டில் உதயச்சந்திரன் மற்றும் மனைவி வேம்பு மட்டும் இருந்தனர்.நேற்று மாலை காரில் வந்த 3 பேர் முகமுடி அணிந்தும் 2 பேர் முகமுடி அணியாமலும் பயங்கர ஆயுதங்களுடன், உதயச்சந்திரன் வீட்டிற்குள் நுழைந்து, உதயச்சந்திரனையும், வேம்புவையும் கடுமையாக தாக்கி, வேம்புவை கட்டிப்போட்டு, வேம்பு கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயின், மோதிரம் உள்பட 10 பவுன் நகைகள், குத்துவிளக்கு, விலை உயர்ந்த செல்போன் மற்றும் வீட்டில் இருந்த ரூ. 13,500 ரெக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளையர்கள் நடத்தி்ய தாக்குதலில் பலத்த காயமடைந்த தம்பதியர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இது தொடர்பாக திருவிடைமருதூர் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகிறார்கள்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவையும் ஆய்வு செய்தனர். உதயசந்திரன் வெளிநாட்டில் இருந்து நகை, பணத்துடன் வந்திருப்பதாக அறிந்து மர்ம நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டார்களா, கொள்ளையடிக்க வேண்டும் என்றால் ஏன் அவர்கள் பட்டப்பகலில் வரவேண்டும். முன்விரோதம் அல்லது வேறு ஏதாவது உள் விவகாரங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
உதயசந்திரனை குறிவைத்து ஏன் தாக்க வேண்டும் என்று போலீசார் துருவி துருவி விசாரித்தனர். இதுபோல அவரது மனைவி வேம்புவிடமும் தனியாக விசாரணை நடத்தினர். இதில் பல பகீர் தகவல்கள் வெளியானது. எனவே முகமூடி கொள்ளையர்களைப்பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர்.