தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா நேற்று நடந்தது.சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி வரவேற்றார். விழாவில் அஞ்சல் துறையால் முழுமையாக பயன்பெறும் இரண்டு ஊராட்சிகளின் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் கடந்த மாதத்தில் 26,126 சேமிப்பு கணக்குகளும், 8899 பேருக்கு ஆதார் சேவையும், 454 GAG பாலிசிகளும், 4576 IPPB கணக்குகளும், 326 பேருக்கு மிண்ணனு உயிர் வாழ் சான்றிதழும், 5400 பேருக்கு 1,15,00,000/- ரூபாய்க்கு ஆதார் மூலம் பண பரிவர்த்தனையும், ஆயுள் காப்பீட்டில் 2961 பாலிசிதாரர்கள் மூலம் புதிய பாலிசிக்கான பிரிமீயம் தொகை 1,34,55,552 ரூபாயும், 2412 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் ஊழியர்களும் கௌரவிக்கப்பட்டனர். தூய்மை இயக்கம் 3.0 அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். தஞ்சாவூர் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
அஞ்சல் துறை வழங்கி வரும் பல்வேறு விதமான சேவைகள் அனைத்து மக்களையும் சென்றடைய அஞ்சல் சமூக வளர்ச்சி விழா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் அஞ்சல் துறை சேவைகளை பெற்று பயனடையுமாறு அஞ்சல் அலுவலர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.