தஞ்சை அருகே வல்லம் ரெட்டிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (38). புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அருள் மேரி (35). கடந்த 20ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற ஜெகதீஷ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அருள் மேரி உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் ஜெகதீஷை தேடி பார்த்து உள்ளார் ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து வல்லம் போலீசில் அருள்மேரி புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.