தஞசை வடக்கு வாசல் சிரேஸ் சத்திரம் சாலையைச் சேர்ந்தவர் அற்புதம் (70). வக்கீல் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வந்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றது.
அவர்களிடம் வந்து தப்பிய அற்புதம் வடக்கு வாசல் நான்கு ரோட்டை நோக்கி ஓடினார். வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஓடி வந்த போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். இதனைப் பார்த்த அற்புதத்தின் மனைவி சுபாங்கினி (65) பின்னாடி ஓடி வந்துள்ளார் அவர் மர்ம நபர்களை தடுக்கும் போது அவரையும் தலையில் வெட்டினர்.
பின்னர் மர்ம நபர்கள் அற்புதத்தை நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி தலையை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், நகர துணை போலீஸ்சூப்பரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம் ,சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் காயமடைந்த சுபாங்கினியை காப்பாற்றி சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த அற்புதத்தின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்கு பதிவு இந்த கொலை சம்பவம் எதற்காக நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் நான்கு மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வக்கீல் குமாஸ்தா கொலை வழக்கில் அவரது இரண்டாவது மருமகனை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
வக்கீல் குமாஸ்தா அற்புதத்தின் இரண்டாவது மகள் மேனகா இவரை சக்திவேல் என்பவர் திருமணம் செய்துள்ளார்.
சக்திவேல் சசிகலா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் இதனை அற்புதம் தட்டி கேட்டுள்ளார் உள்ளார்.
இந்த நிலையில் விவாகரத்து கேட்டு சக்திவேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அற்புதம் சக்திவேல் இரண்டாவது மனைவியான சசிகலாவுக்கு வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் கூலிப்படை மூலம் வைத்து மாமனாரை கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சக்திவேலை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்