Skip to content

தஞ்சை முதியவர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, ஜபருல்லா,(61),. தச்சு தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த, 9 வயது சிறுவனை, வீட்டின் உள்ளே அழைத்து சென்று, வாயை பொத்தி, பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதனை வெளியே சொன்னால், கத்தியால் கழுத்து அறுத்து விடுவேன் என கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
இதனால், சிறுவன் யாரிடமும் சொல்லாமல், கடந்த இரண்டு நாட்களாக சோர்வாக இருந்துள்ளார். இதை பார்த்த சிறுவனின் தாய், சந்தேகமடைந்து, அவரிடம் விசாரித்தார். அப்போது,சிறுவன் நடந்த சம்பவத்தை கூறி தாயிடம் அழுதுள்ளார். உடனே இது குறித்து சிறுவனின் பெற்றோர், அளித்த புகாரின் பேரில், திருவிடைமருதுார் அனைத்து மகளிர் போலீசார், விசாரணை நடத்திஜபருல்லா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.

error: Content is protected !!