Skip to content

தஞ்சை அருகே போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த பெண் பலி- இன்னொரு பெண் சீரியஸ்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் நடுகாவிரியை சேர்ந்தவர்   தினேஷ் (32) இவரை அடிதடி  வழக்கு, ஆயுதங்களை காட்டி மிரட்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த  வழக்கு   விசாரணைக்காக நடுக்காவிரி காவல்நிலையத்திற்கு  நேற்று இரவு  தினேசை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இதை அறிந்த தினேசின் தங்கைகள் மேனகா (31),  கீர்த்திகா(29) ஆகியோர் போலீஸ் நிலையம் சென்று தங்கள் அண்ணனை விடுவிக்கும்படியும், அவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாகவும் கூறி வாதாடி உள்ளனர்.

தனக்கு அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ள நிலையில், வேண்டும் என்றே போலீசார் இந்த பொய் வழக்கு  போட்டு உள்ளனர் என கூறி உள்ளனர்.  போலீசார்  அவரை விடவில்லை.  வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்து விட்டனர்.

இதனால் தங்கைகள் இருவரும் நடுக்காவேரி போலீஸ் நிலையம் முன் விஷம் குடித்தனர். உடனடியாக அவர்கள் இருவரையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி  தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  கீர்த்திகா இறந்தார்.  மேனகாவின் நிலைமை மோசமாக உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

error: Content is protected !!