வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் ஆலயத் திருக்குளத்தில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் இரா.தெய்வானை முன்னிலை வகித்தார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில், நீலகண்டன், ரஜினி, சரவணமூர்த்தி, பேராவூரணி வினோத் உள்ளிட்ட வீரர்கள் மழை, வெள்ளத்தில், விபத்தில் சிக்கியவர்களை மீட்பது எவ்வாறு, ஆற்றில் தண்ணீர் அதிகளவு வரும் போது சிக்கிக் கொண்டால் தங்களுக்கு கிடைக்கும் பிளாஸ்டிக் கேன்கள், காற்று அடிக்கப்பட்ட டியூப்களை பயன்படுத்தி தங்களை தாங்களே தற்காத்துக் கொள்வது, மின்விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதில், வருவாய்த் துறையினர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்