ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ன மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயில் இன்றும் கட்டிட கலையின் சான்றாக விளங்குகிறது. இந்த கோயிலை சுற்றி அகழி அமைக்கப்பட்டிருந்தது. நாளடைவில் இந்த அகழி தூர்ந்து போய்விட்டது. தற்போது இந்த அகழியில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. இன்று காலை ராஜராஜ கோழன் சிலைக்கு பின்புறம் அகழியில் இருந்து புகைமூட்டம் வந்தது. திடீரென குப்பைகள் தீப்பற்றி எரியத்தொடங்கியது. தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்களும், தீயணைப்பு படையினரும் சென்று தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் புகைமூட்டமாக காட்சியளித்தது. அகழியில் கொட்டப்பட்ட குப்பையில் இருந்து தீ பரவியிருக்கலாம், அல்லது அணைக்காமல் வீசப்பட்ட பீடி, சிகரெட்டில் இருந்து தீ ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகி்றது.