தஞ்சை மாவட்டத்தில் 1984ல் சோசம்மாள் என்ற பெண் கலெக்டர் பணியாற்றினார். அதன் பின்னர் 40 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் தஞ்சையில் பெண் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நியமிக்கப்பட்டுஉள்ளார். இன்று அவர் தஞ்சை மாவட்டத்தில் முதன் முதலாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்திற்கு வந்தி்ருந்த விவசாயிகள் கலெக்டருக்கு தென்னங்கன்று மற்றும் சால்வை கொடுத்து வரவேற்பு அளித்தனர். தங்கள் மாவட்டத்தில் கலெக்டர் நீண்ட நாட்கள் சிறப்பாக பணியாற்றவும் விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தனர். மாவட்ட கலெக்டருக்கு விவசாயிகள் தெரிவித்த வாழ்த்து, கூட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி்யது.