தமிழ்ப்புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதுபோல விவசாயிகள் இன்று வயல்களில் பூஜைகள் செய்து விவசாயம் செழிக்க இறைவனை வேண்டினர்.
தமிழ்ப்புத்தாண்டையொட்டி நடக்கம் இந்த நிகழ்ச்சிக்கு நல்லேர் பூட்டுதல் என்று பெயர் . தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த நல்லேர் பூட்டுதல் நடந்தது. தஞ்சை அடுத்த வேங்கைராயன் குடிகாட்டில் உள்ள விவசாயி இன்று காலை தனது வயலுக்கு சென்று ஏர்பூட்டி, விதைகளுடன் சென்று வயலில் தேங்காய், வெற்றிலை, பாக்கு, வைத்து ஊதுபத்தி ஏற்றி, தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.
இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி , எந்த இயற்கை சீற்றமும் இல்லாமல், விவசாயத்துக்கு அனுகூலமாக இயற்கை அமையவேண்டும் என வேண்டி ஏர் உழவை தொடங்கினார். பின்னர் விதைகளையும் தூவினார்.
இதுபோல புதுகை மாவட்டம் குளவாய்ப்பட்டி உள்பட பல இடங்களிலும் நல்லேர் பூட்டும் நிகழ்ச்சி நடந்தது.