தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 21ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்கு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் இந்த குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம். முன்னாள் படைவீரர் / சார்ந்தோர்கள் இரண்டு பிரதிகளில் மனுக்களை தங்கள் அடையாள அட்டையுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். எனவே, இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்