தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணா(45) இவரது கைகள் செயல்படாது. மாற்றுத்திறனாளியான இவரது மனைவி பிரேமா(40). இவர்களுக்கு 2 குழந்தைகள்.
ராஜேஸ்கண்ணாவின் தந்தை சண்முகவேலு(83) ஓய்வுபெற்ற உதவிக்கல்வி அலுவலர். இவருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் பென்சன் வருகிறதாம். அந்த பென்சன் மூலமே ராஜேஸ்கண்ணாவின் குடும்பம் நடந்து வந்தது. இந்த நிலையில் பிரேமா சொத்துக்களை தன் கணவன் பெயருக்கு மாற்றி எழுதி தரும்படி மாமனாரிடம் கேட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் சண்டை இருந்து வந்தது.
இது தொடர்பாக இன்று காலையும் சண்டை ஏற்பட்டதாம். இதில் ஆத்திரம் அடைந்த சண்முகவேலு, மருமகளை அரிவாளால் சரமாரியாக வெட்டினாராம். இதில் பிரேமா இறந்து விட்டார். மருமகளை கொலை செய்த மாஜி கல்வி அதரிகாரி சண்முகவேலு பட்டீஸ்வரம் போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.