Skip to content

தஞ்சை மாநகராட்சி: ரூ.15.38கோடி உபரி பட்ஜெட் தாக்கல்

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம்  இன்ற  நடந்தது. மேயர் சண். ராமநாதன் தலைமை வகித்தார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி கவுன்சிலரும், கணக்கு குழு தலைவருமான வெங்கடேசன் பட்ஜெட் அறிக்கை  வாசித்தார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடந்து விவாதம் வருமாறு:

மேயர் : இம்முறை மாநகராட்சி ரூ.15.38 கோடி உபரி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது.

சரவணன் (அதிமுக) எனது வார்டில் பாதாள சாக்கடைக்கு நிதி இல்லை எனக் கூறுகின்றனர். இதை கவனிக்க நாதியில்லை என குற்றம் சாட்டியபடியே கழுத்தில் பாதாள சாக்கடைக்கு நிதி இல்லை என வாசகங்கள் எழுதப்பட்ட போர்டை அணிந்தபடி கையில் திருவோடு ஏந்தி வந்து கோஷமிட்டார்.

தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று மாநகராட்சி நிர்வாகத்தில் எவ்வித பணிகளும் நடக்கவில்லை என குற்றம் சாட்டி பேசினர். தொடர்ந்து பாஜக கவுன்சிலர் ஜெய் சதீஷ் -ம் அதிமுக கவுன்சிலர் உடன் இணைந்து கோஷம் எழுப்பினார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மணிகண்டன்(அதிமுக): பாதாள சாக்கடை பணிகள் ஓர் ஆண்டாக நடப்பதில்லை. உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதிலுள்ள நிதியை அடிப்படை பணிகளுக்கு ஒதுக்கி இருக்கலாமே. விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

சசிகலா (திமுக): தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை திருவிழாவை ஒட்டி தேரோடும் நான்கு ராஜ வீதிகளிலும் சாலையை சீரமைக்க வேண்டும். மொபைல் கழிவறைகள் ஏற்படுத்த வேண்டும்.

ஆனந்த் : ஆணையர் என்ற அதிகாரி எந்த வகையில் தஞ்சை மாநகராட்சியில் பணியாற்றுகிறார். பெரிய மார்க்கெட்டில் ரூ. 10 வசூல் செய்கின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை தெரிவித்துள்ளேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும். சுடுகாடு வசூல் தொகை எங்கு சென்றது. புதிய பேருந்து நிலையம் பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை. மக்களுக்கு பணியாற்ற தான் ஆணையர் உள்ளார். ஆனால் மக்களை துன்புறுத்தும் ஆணையராக உள்ளார்.

 

மேயர் : கவுன்சிலர் கூறிய பிரச்சினைகள் குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கோபால் (அதிமுக) : சின்ன சின்ன வேலைகளைக் கூட மாநகராட்சி செய்து தருவதில்லை. எனது வார்டில் மோட்டார் ரிப்பேர் ஆகி உள்ளது. இன்னும் சரி செய்யப்படவில்லை.

மேயர் : இரண்டு மோட்டார்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மோட்டார் மற்றும் பழுதாகி உள்ளது. அதையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனந்த்: புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்டட மாநாட்டு அரங்கத்தை, இடிப்பதற்கு எப்படி அனுமதி அளித்தீர்கள். இந்த விவகாரத்தில், மாநகராட்சி ஆணையர் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மாநாடு கட்டடத்தை இடிக்க அனுமதி அளித்து விட்டு, முறையான ஆதாரங்களை கொடுக்காமல், நீதிமன்றத்திற்கு வழக்குக்காக சென்றுள்ளீர்கள். உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கூறினால், நீங்கள் செய்துக்கொள்ளுங்கள் என கூறுவது முறை அல்ல. இது குறித்து கேட்டால், மேயர் முறையான பதில் அளிக்கவில்லை. இப்படியாக, மேயர் மீதான நிலம் வாங்கிய குற்றச்சாட்டிற்கு நாங்கள் கேள்வி எழுப்பிய பின்னரே பதில் அளித்து உள்ளீர்கள். இந்த மாநகராட்சியில் இதற்கு முன்பு இருந்த தலைவர்களால் பெருமை தான் ஏற்பட்டுள்ளது. தற்போது உங்களின் ஊழலால் அவப்பெயர் ஏற்படுகிறது. மேயர் மற்றும் ஆணையரால் தஞ்சாவூர் மாநகராட்சியின் நற்பெயர் சீர்குலைந்துள்ளது.

மேயர் : இவ்வாறு குறை கூறுவது தவறான ஒன்றாகும். சட்டப்பூர்வமாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

error: Content is protected !!