தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு ஒரு தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டு சென்றது. சீர்காழியில் இருந்து தஞ்சை நோக்கி இன்னொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இரண்டு பஸ்களும் வயலூர் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பஸ் டிரைவர்கள் அருள், செல்வகுமார் மற்றும் பயணிகள் 18 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக 20 பேரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து தஞ்சை தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.