Skip to content
Home » தஞ்சையில் பழைய வீட்டை இடித்தபோது விபத்து…… 2 வாலிபர்கள் பலி

தஞ்சையில் பழைய வீட்டை இடித்தபோது விபத்து…… 2 வாலிபர்கள் பலி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ரயிலடி பகுதியைச் சேர்ந்த பஷீர்அகமது மகன் பைசல் (52). இவர் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக  நேற்று  ஐந்து தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.  மாலையில்  முதல் தளத்தில் நின்று கொண்டு தொழிலாளர்கள் மேலே உள்ள கட்டிடங்களை இடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கொத்தனார் வேலை பார்க்கும் சக்கராப்பள்ளியைச் சேர்ந்த குணசேகரன் மகன் மணிகண்டன் (30), அய்யம்பேட்டையைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் குமார் (23) ஆகியோர் மீது கட்டிடத்தின் சிலாப் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இருவரும் சிக்கிக் கொண்டனர். இவர்களின் அலறல் சத்தமும், அங்கு வேலைப் பார்த்த மற்றத் தொழிலாளர்கள் கூச்சலிட்டதை கேட்டு  அருகில் உள்ளவர்கள் வந்து இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இதையடுத்து பாபநாசம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். ஆனால் சிலாப் அடியில் சிக்கியதால் இருவரும் அந்த இடத்திலேயே இறந்துவிட்டனர்.  தொடர்ந்து அய்யம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, இருவரது உடலையும் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *