தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜன்(36). இவரது மனைவி சரண்யா(33). இவர்களுக்கு நிதிஷா(12), நிவேதா(14) என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் திருப்பூரில் வசிக்கின்றனர். பொங்கல் விழாவிற்காக நேற்று முன்தினம் மாலை திருப்பூரில் இருந்து சவுந்தரராஜன் குடும்பத்துடன் மேல உளூருக்கு வந்து இருந்தார். வீட்டிற்கு செல்லும் வழியில் கல்லணை கால்வாயில் கிளை ஆறான கல்யாண ஓடையில் இறங்கிய குளித்தார். தனது தந்தை ஆற்றில் விளையாடி குளிப்பதை அவரது மகள்கள் வீடியோ எடுத்தப்படி கரையில் நின்று வேடிக்கை பார்த்தனர். அப்போது, திடீரென சவுந்தரராஜன் நீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டார். தந்தை நீரில் இருந்து வெளியே வரவில்லை என மகள்கள் மற்றும் தாய் அழுதனர். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு சவுந்தரராஜன் உடலை வீரர்கள் மீட்டனர்.