தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் 12ம் தேதியுடன் ஓய்வு பெற இருந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது பணம் பெற்றுக்கொண்டு உரிய கல்வித் தகுதி இல்லாத 40 பேரை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களில் அமர்த்தியதாக எழுந்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
உரிய தகுதி இல்லாத அந்த 40 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் மாளிகையில் இருந்து துணைவேந்தர் திருவள்ளுவனிடம் இருமுறை விளக்கம் கேட்டதாகவும், அதற்கு முறையான பதில் தராமல் காலம் கடத்தியதாலும் துணைவேந்தர் திருவள்ளுவன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.