தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பாக ஆலோசனை கூட்டம் அதிமுக அமைப்புச் செயலாளாரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் காமராஜ் பேசியதாவது:
தஞ்சாவூர் தெற்கு, வடக்கு மாவட்ட உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்திற்கு இரண்டு நாட்களில் அனுப்ப வேண்டும். எடப்பாடி பழனிசாமி தஞ்சைக்கு வந்த போது மிக சிறப்பான முறையில் வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி. இப்பொழுதுதான் தஞ்சை தெற்கு மாவட்டம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. வரும் 29ம் தேதி தஞ்சை ரயிலடியில் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரண்டு வந்து ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், பால்வள தலைவர் காந்தி, தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், ஒத்தநாடு ஒன்றிய தலைவர் மா.சேகர், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், முன்னாள் எம்எல்ஏ சி.வி.சேகர், புண்ணியமூர்த்தி, முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் நகரச் செயலாளர் பஞ்சாபிகேசன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் நாகராஜன், செயற்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் ஹேமா, பிரதிநிதிகள் சண்முகசுந்தரம், நடராஜன், மாமன்ற உறுப்பினர்கள் கோபால், கேசவன், தட்சிணாமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.