தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் உலக அளவில் ரூ.540 கோடி வசூல் செய்து திரையரங்குகளில் இன்றும் ஓடுகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ‘லியோ’ படத்தின் வெற்றி விழா, நேற்று (நவம்பர் 1) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய மன்சூர் அலிகான், தமிழகத்தின் ‘நாளைய தீர்ப்பு’ விஜய்யாக இருக்க வாழ்த்துகள் என நடிகர் மன்சூர் அலிகான் சூசகமாக பேசியுள்ளார். உங்களை நம்பிதான் நாடு இருக்கு, நாளைய தீர்ப்பை எழுத தயாராகுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெஞ்சில் குடியிருக்கும் தளபதி ரசிகர்களுக்கு வணக்கம் லியோ படத்தில் நானும், விஜய் தம்பியும் தம் அடிப்போம், குடிப்போம். அதுலாம் சும்மா பொய். அதெல்லாம் படத்திற்காக தான். தவறான பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள் என்று அறிவுரை கூறினார்.
‘நாளைய தீர்ப்பு’ விஜய்யாக இருக்க வேண்டும் என்று சொன்னது விஜய்யின் அரசியல் வருகை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அண்மைய காலமாக விஜய்யின் நகர்வுகளும் அதன் அடித்தளமாகவே அமைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1992ஆம் ஆண்டில் ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக திகல்கிறார். இந்த படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.