Skip to content
Home » சர்க்கரை நோய் பாதிப்பு… தமிழ்நாடு 2ம் இடம்…

சர்க்கரை நோய் பாதிப்பு… தமிழ்நாடு 2ம் இடம்…

  • by Senthil
இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு சுகர் பேஷண்ட்டாக இருக்கலாம் என்ற நிலை உருவாக்கி வருகிறது .இது கவலை அளிக்க கூடிய விஷயம் ஆகும் .அதனால் ஆரோக்கியமான ஒரு சமுதாயம் உருவாகாமல் போகலாம் .எனவே சுகர் வந்த பின்னர் அவஸ்தை படுவதை விட அது வரும் முன் காப்பதே சிறந்த வழியாகும் .அதிக கொழுப்புள்ள உணவுகலை உன்பது ,உடலுழைப்பு இல்லாமல் இருப்பது ,உடல் பருமனாய் இருப்பது ,மன அழுத்தம் போன்றவை சுகருக்கு முக்கிய காரணம் .மேலும் பரம்பரையும் இந்த சுகருக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதனால்  இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், அவை இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய், குருட்டுத்தன்மை மற்றும் உறுப்பு துண்டித்தல் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இந்நிலையில், நாட்டிலேயே அதிகளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. வட மாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்களிலேயே சர்க்கரை நோய் விகிதம் அதிகமாக காணப்படுகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளத்தில் 27.4 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து தமிழகத்தில் 22.3 சதவீதம் பேரும், ஆந்திராவில் 21.1 சதவீதம் பேரும் அந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். வட மாநிலங்களான உத்தரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 12 சதவீதத்துக்கும் குறைவாகவே பாதிப்பு உள்ளது. தென்னிந்தியாவின் உணவு பழக்கவழக்கமும், அது சார்ந்த மரபணுவும் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரிப்புக்கான காரணமாகக் கூறப்படுகிறது. அதேபோன்று உடற்பயிற்சியின்மை, வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவையும் பிரதானமாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!