Skip to content

தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவராக சுரேஷ் ராஜன் நியமனம்

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் (Tamil Nadu State Food Commission) புதிய தலைவராக  முன்னாள் அமைச்சர்   என் சுரேஷ்ராஜன் நியமிக்கப்பட்டார்.  இதையொட்டி அவர் இன்று  மரியாதை நிமித்தமாக  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது உணவு ஆணையத்தின்  உறுப்பினர்கள் கே.எம். மதுபாலா, . எம். கணேசன், கே. கருணாநிதி, எஸ். பெரியாண்டவர். டி. டி. சீனிவாசன் ஆகியோரும்  முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்கள். இந்த நிகழ்ச்சியில்  உணவு மற்றும் உணவு  மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர்  சத்யபிரத சாகு  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!