2023 – 24ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 2023 – 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
தமிழ்நாடு அரசின் 2023-24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை….
நிதி மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாக கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன.
Rs.62,000 கோடி இருந்த வருவாய்ப் பற்றாக்குறையை
Rs. 30,000 கோடி அளவிற்கு குறைத்துள்ளோம்- சமுகநலத்திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் வரும் ஆண்டுகளில் வருவாய்ப்பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்படும்.- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்புகள்:
சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படும்
நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ரூ.11 கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர்.
உயிரிழந்த படை வீரர்களுக்கு தமிழ்நாடு அரசின் நிதியுதவித் தொகை 20 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
வீர திர செயல்கள் புரிந்த வீரர்களுக்கான நிதித்தொகை 4 மடங்கு உயர்த்தப்படுகிறது
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறப்பு – நிதியமைச்சர்
பள்ளிக்கல்வி துறை
பேராசிரியர் அன்பழகன் பள்ளிகள் மேம்பாட்டுத்திட்டத்திற்கு 1500 கோடி ஒதுக்கீடு
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்- அனைத்து ஆசிரியர்களும் சம பயன்கள் பெறுவார்கள்
110 கோடி செலவில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் கீழ் 4 மற்றம் 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்
10 கோடி செலவில் இலக்கியத் திருவிழா
சர்வதேச புத்தக காட்சிக்காக இந்தாண்டும் நடைபெறும்
மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்காக இணைய தளம் அமைக்கப்படும்
3 லட்சம் புத்தகங்களுடன் மதுரை கலைஞர் நுாற்றாண்டு கலைஞர் நுாலகம் பயன்பாட்டுக்கு வரும்
பள்ளிக்கல்வித்துறை 40299 கோடி ஒதுக்கீடு
உயர்கல்வி திறன்மேம்பாடு
71 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் திறன்மையங்களாக மாற்றும் திட்டம்
நான் முதல்வன் திட்டம்- அனைத்து பொறியியல், கலை அறிவியல் கல்லுாரியிலும் செயல்படுத்தப்படுகிறது- 12.7 லட்ச மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்திற்கு 50 கோடி ஒதுக்கீடு
இளைஞர்களுக்கு தொழிற்சாலையில் பயிற்சி அளிக்க 25 கோடியில் திட்டம்
கிருஷ்ணகிரியில் 80 கோடி மதிப்பீட்டில் அதி நவின திறன்மேம்பாட்டுத்திட்டம்
குடிமைப்பணியில் சேரும் தமிழ்நாட்டு மாணவர்களை அதிகரிக்க, 1000 மாணவர்களுக்கு 7000 ருபாய் ஊக்கத்தொகையுடன் 10 மாதம் பயிற்சி அளிக்கப்படும்
உயர்கல்வித்துறைக்கு 6967 கோடி ஒதுக்கீடு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த ₹25 கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர்.
மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிப்பு
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக அதிகரிப்பு – நிதியமைச்சர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை
ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்க காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 18 லட்ச மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும், எனவே இத்திட்டத்திற்கு 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
புதுமைப்பெண் திட்டத்தில் 2.2 லட்சம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இதனால் பெண்களின் கல்லுாரியில் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது.
சுயஉதவிக்குழு திட்டத்தில் 30,000 கோடி வங்கி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சுழல் மற்றும் பருவநிலை மாற்றம்
கடல் அரிப்பை தடுக்கவும், மாசுபாட்டை குறைக்கவும், உலக வங்கியின் நிதிஉதவியுடன் 2000 கோடி மதிப்பில் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் செயல்படுத்தப்படும்
நீலகிரி உயிர்கோள் காப்பகத்தை தென்காவிரி காப்பகத்துடன் இணைத்து தந்தை பெரியார் என்று புதிய வனவிலங்கு சரணாயலம் அமைக்கப்படும்
பறவைகளின் ஆய்வை அதிகரிக்கவும் மரக்காணத்தில் 25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்
காலநிலை மாற்ற பணியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் இணைந்து விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இத்துறையில் 1248 கோடி ஒதுக்கீடு
கடல் அரிப்பை தடுக்கவும், மாசுபாட்டை குறைக்கவும், உலக வங்கியின் நிதிஉதவியுடன் 2000 கோடி மதிப்பில் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் செயல்படுத்தப்படும்
அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் – நிதியமைச்சர்
நகர்புற மேம்பாடு…
அம்ருத் 2,0 திட்டத்தில் கழிவுநீர் அகற்றுதல், நீர்நிலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக 612 கோடி ஒதுக்கீடு
மக்களுக்கான குடிநீர் திட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்திற்கு 6600 கோடி ஒதுக்கீடு
கோவையில் 172 கோடி மதிப்பில் 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி புங்கா அமைக்கப்படும்
சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் நீர்வழிகள் துாய்மைப்படுத்தும் திட்டத்தில் அடையாறு ஆற்றை சீர்ப்படுத்த திட்டம்
1424 கிமி மண்சாலைகள் தரமான சாலைகளாக மேம்படுத்தப்படும்
பொதுக்கழிப்பறைகளை மேம்படுத்த 430 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
சென்னை தீவுத்திடலில் நகர்புற பொதுசதுக்கம்- திறந்தவெளி திரையரங்கம் போன்ற திட்டங்கள் மேம்படுத்தப்படும்
கண்ணகி நகர், அத்திப்பட்டு பாேன்ற இடங்களை மேம்படுத்த திட்டம்
மாமதுரை மற்றும் எழில்மிகு கோவை திட்டத்தின் கீழ் இரு மாவட்டங்களும் மேம்படுத்தப்படும்
சமச்சீர் வளர்ச்சி….
வளர்ச்சியடையாத வட்டாரங்களை வளர்ச்சிப்படுத்த வளம்மிகு வட்டாரங்கள் என்ற திட்டம்
சென்னையின் சீரான வளர்ச்சியை உறுதி செய்ய 1000 கோடி மதிப்பில் வட சென்னை வளர்ச்சித்திட்டம்
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ரயில்வே போக்குவரத்து பங்களிப்பு குறைவாக உள்ளது; இதை சரி செய்ய, ரயில்வே அமைச்சகம் உடன் இணைந்து புதிய வழித்தடங்களை உருவாக்க புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும் – நிதியமைச்சர்
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ. 9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் – நிதியமைச்சர்
எரிசக்தி
மின்துறையில் அரசால் மேற்கொள்ளபட்ட சீர்த்திருத்தங்களின் நடவடிக்கையால் இத்துறையின் நிதியிழப்பு குறைக்கப்பட்டுள்ளது. 2021-22 ம் 11,955 கோடியில் இருந்து நடப்பாண்டில் 7,725 கோடியாக குறையும்- நிதியமைச்சர்
2030 ம் ஆண்டிற்குள் 33000 மெகா வாட் மாநிலத்தின் மின்உற்பத்தி திறனை உயர்த்த இலக்கு நிர்ணயம்
பசுமை ஆற்றலின் பங்களை 50% ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது
2030ம் ஆண்டிற்குள் மொத்த மின்உற்பத்தில் 50% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உருவாக்க புதிய கொள்கை மற்றும் நிருவனம் ஏற்படுத்தப்படும்
மின்துறையில் அரசால் மேற்கொள்ளபட்ட சீர்த்திருத்தங்களின் நடவடிக்கையால் இத்துறையின் நிதியிழப்பு குறைக்கப்பட்டுள்ளது. 2021-22 ம் 11,955 கோடியில் இருந்து நடப்பாண்டில் 7,725 கோடியாக குறையும்- நிதியமைச்சர்
தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது; உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும் – நிதியமைச்சர்
100 கோடி செலவில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்
தமிழ்நாடு மின்வாகன உற்பத்தியில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
பெண்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு உருவாக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு ஆதரவு அளித்து வருகிறது
எத்தனால் உற்பத்திக்கு முதலீட்டை ஈர்க்க திட்டம்
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் கீழ் இலவச WIFI வசதி ஏற்படுத்தப்படும்
ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டு மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்ப புங்கா அமைக்கப்படும். இதனால் 4000 வேலைவாய்ப்புகள் அமைக்கப்படும்- நிதியமைச்சர்
சுற்றுலா மேம்பாட்டுத்துறை
உள்நாட்டு சுற்றுலாவில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது
பிச்சாவரம், பும்புகார், ஓகேனக்கல் சுற்றுலா பகுதிகளை மேம்படுத்தப்படும்
சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும்- நிதியமைச்சர்
இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை
ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 4491 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் 574 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. வரும் நிதியாண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும்- நிதியமைச்சர்
முதல்வரின் முகவரி திட்டம்
இத்திட்டத்தில் பெறப்பட்ட 17.7 லட்ச மனுக்களில் 17.3 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. -நிதியமைச்சர்
மகளிர் உரிமைத்தொகை’ தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் – நிதியமைச்சர்
மகளிர் உரிமைத் தொகை
தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதை பெரும் மகிழ்ச்சியும் அறிவிக்கேன்- நிதியமைச்சர்
அண்ணாவின் பிறந்தநாளான செப். 15ம் நாளில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் மகளிர் உரிமைத் தொகை தொடங்கி வைக்கப்படும்- இத்திட்டத்திற்கு 7000 கோடி ருபாய் ஒதுக்கீடு
– நிதியமைச்சர்