கனடா நாட்டின் வின்னிபெக்கு நகரில் நடைபெற்ற ” காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு போலீசார் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர். வெற்றிபெற்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தாங்கள் பெற்ற பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பின்போது காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல் துறை கூடுதல் இயக்குநர் (ஆயுதப்படை) ஜெயராம் ஆகியோர் உடனிருந்தனர்.