இந்திய அரசு, குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 24 அலுவலர்களுக்கு இந்திய குடியரசு தலைவரின் தகைசால் பணி மற்றும் மெச்சதக்க பணிக்கான விருதுகளை அறிவித்துள்ளது. இந்த விருதுகள் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல் அலுவலர்களுக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் ஆண்டிற்கு இருமுறை வழங்கப்படுகிறது. இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்த 03 அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
1. சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, சிறப்பு புலனாய்வு பிரிவு-II, காவல்துறை தலைவர் லலிதா லட்சுமி,
2. தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, 11ம் அணி , ராஜபாளையம், தளவாய் , ராஜசேகரன்,
3. சிறப்பு இலக்குப்படை ஈரோடு, காவல் உதவி ஆய்வாளர் ராயப்பன் ஆவர்.
இதனைதொடர்ந்து மெச்சதக்க பணிக்கான காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையை சார்ந்த 21 அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.