கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது இதில் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 53 முழு நேர மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் இடங்களில் புதிய முழு நேர மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்க தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.