தமிழக பாடநூல் கழகம் சார்பாக வெளியிடப்படும் அனைத்து புத்தகங்களையும் தமிழகம் முழுவதும் உள்ள இடங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில் திருச்சியில் இன்று சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள இரு புத்தகக் கடைகள் இரண்டு ஸ்டால்களை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு பாட நூல் கழகம் சார்பாக பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளோம். மொழி பெயர்த்துள்ளோம்
அந்த புத்தகத்தை எல்லாம் குறைந்தபட்சம் 100 இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்கள் டிபிஐ அலுவலகத்திற்கு தேடி வந்து வாங்குவதை காட்டிலும். புதிதாக கொண்டு வருவதை பெற்றுக் கொள்ளும் வகையில் கொண்டு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டோம். தற்போது யாரும் பார்க்காத வ.உ.சி புகைபடத்துடன் கூடிய புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். தொடர்ந்து ஒவ்வொன்றையும் புதிதாக கொண்டு வரும் வகையில் தமிழக முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
சென்னையில் ஹிக்கிம்பாதம்ஸ் புத்தக நிலையத்தில் ஸ்டால் அமைத்துள்ளோம். இதே போல தமிழகத்தில் திருச்சியில் சிங்காரத்தோப்பு பகுதியில் ராசி மற்றும் சுமதி புத்தக நிலையங்களில் ஸ்டால் அமைத்துள்ளோம். நான் பள்ளி மாணவனாக இருக்கும்போது இங்கு தான் புத்தகங்கள் வாங்கினேன். அந்த நினைவுகள் இப்போதும் எனக்கு இருக்கிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் கொண்டு செல்ல உள்ளோம்.
கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டியதுதான் எங்களுடைய எண்ணம். மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசுஉறுதியாக உள்ளது. அதை நோக்கிதான் நாங்கள் செயல்படுகிறோம்.ஒன்றிய அரசின் நவீன பள்ளிகள் தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளோம். அதனால் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்று அர்த்தமாகாது. குழு அமைத்து அதில் வேண்டியவற்றை மட்டுமே எடுத்துக்கொள்வேம்.” இவ்வாறு அவர் கூறினார்.
முதலாவது கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் .அதை நோக்கி தான் எங்கள் பயணம் இருக்கிறது. மாணவர் படிப்பில் அரசியல் செய்யக்கூடாது .புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு என்றும் ஏற்றுக் கொள்ளாது.
இவ்வாறு அவர் கூறினார்.