Skip to content

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் திடீர் ராஜினாமா….

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமார்(28), பழநியில் உள்ள தமிழ்நாடுமெர்க்கன்டைல் வங்கியில்சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அவரது கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டது. பின்னர், அந்த தொகை அவரது கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விவகாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஓட்டுநர் ராஜ்குமார் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். ஆனால், இதுவரை அந்தப் பணம் தொடர்பாக வங்கி சார்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் திடீரென தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாகவும், அதை வங்கி நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாகவும் தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *