தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (28.2.2023) சென்னை விமான நிலையத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
