உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி அரியலூர் தமிழ்க்களம் புத்தக நிலையத்திற்கு மாநில அளவிலான மஞ்சப்பை மூன்றாம் பரிசும், மற்றும் விருதும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைசசர் மெய்யநாதன் மற்றும் துறை செயலாளார் சுப்பிரியா சாகு ஐ.ஏ.எஸ் விருது வழங்கினர். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் (Single Use Plastic) மாற்றாக நீண்ட காலமாக துணிப்பையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பயன்படுத்தியும் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்ற தமிழ்க்களம் புத்தக நிலையத்திற்கு இவ்விருது வழங்கப்பட்டது. இந்த இந்த புத்தக நிலையத்தின் உரிமையாளர் தமிழ்க் களம் இளவரசன் சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்காக நீண்ட காலமாக துணிப்பை இயக்கம் மூலமாக துணிப்பையை மக்களிடையே அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே வழங்கி வருகின்றார்.
தமிழ்நாடு அரசின் மாநில மஞ்சப்பை விருது… அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்..
- by Authour
