இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 8ம் தேதி லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். இந்தியாவை சேர்ந்த ஒருவர் சிம்பொனி அரங்கேற்றம் செய்வது இது தான் முதல்முறை. இதற்காக பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இளையராஜாவின் பிறந்த நாளான ஜூன் 2ம் தேதி அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.