5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் . மாநிலத் தலைவர் வாலன்டைன் பிரிட்டோ
தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் துரைப்பாண்டி, சுமதி வெங்கடேசன் மற்றும் கோரிக்கையை வலியுறுத்தி மாநில துணைத் தலைவர் பெரியசாமி, மாநில பொதுச் செயலாளர் லட்சுமணன் ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து அனைவருக்கும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் பணிபுரியும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், வருடம் தோறும் தரப்படும் ஊதிய உயர்வை இந்த ஆண்டு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவே, தமிழக அரசு குறைந்தபட்ச ஊதியமாக 15ஆயிரம் முதல் 18ஆயிரம் வரை வழங்கி வருகிறது. ஆனால் எங்களது நீண்ட நாள் கோரிக்கையான ரூபாய் 35ஆயிரத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷமிட்டனர். இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை சேலம், திருவாரூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500க்கு மேற்பட்ட மாவட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.