தமிழக கவர்னா் ரவி தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள், பர்திவாலா, மகாதேவன், ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில் கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும், இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும், கவர்னர் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார், ரவியின் செயல்பாட்டில் நேர்மை இல்லை என்றும் கூறி உள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியதாவது:
2 ஆண்டு கவர்னர் கிடப்பில் போட்ட, 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. அத்துடன் இன்று முதல் அந்த மசோதாக்கள் அமலுக்கு வந்துள்ளதாகவும் உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. ஆளுநருக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமனறம் கூறி உள்ளது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.
‘இந்த தீர்ப்பு மூலம் நாடு முழுவதற்கும் உள்ள மாநிலங்களின் சுயாட்சியை நிலைநாட்டி உள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் நலன் கருதி வழக்கு தொடர்ந்தது முக்கியமானது. கவர்னர்கள் இடையூறாக இருந்தால் கோர்ட் டை அணுகலாம் என்று கோர்ட் கூறி உள்ளது. இந்த தீர்ப்பு இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.
ஒரு கவர்னர் அரசுக்கு பிரண்ட்டாக (நண்பன்) இருக்கணும், மாநில அரசு நியமிப்பவர் தான் பல்கலைக்கழக துணைவேந்தர்களாக இருக்க முடியும். தமிழ்நாடு யாரை துணைவேந்தராக நியமிக்கிறதோ, அவர் தான் துணைவேந்தராக முடியும்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஆளுநர் மேல்முறையீடு செய்தாலும், திமுக அதை எதிர்க்கும். அதையும் வழக்கு மன்றத்தில் சந்திப்போம். இனி வரும் காலங்களில் கவர்னர் காலதாமதம் செய்ய முடியாது. கவர்னர் நிறுத்தி வைத்தால், சட்டமன்றத்துக்கு தான் மசோதா வரணும், அதை மீண்டும் இயற்றி அனுப்பினால், தானாகவே அந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்து தான் தீரவேண்டும். கவர்னருக்கு வேறு வாய்ப்பே இல்லை.
ஜனாதிபதிக்கு எப்போது அனுப்பலாம் என்றால், முதல்முறையாக மசோதா வரும்போது, அதை ஜனாதிபதிக்கு அனுப்பவலாம். எந்த சூழ்நிலையில் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் என்றால், ஜனாதிபதி ஒப்புதல் கொடுக்க வேண்டிய மசோதாக்கள் மட்டுமே அவர் ஜனாதிபதிக்க அனுப்ப முடியும்.
இந்த தீர்ப்பின் மூலம் ஆளுநர் பல்கலைக்கழக வேந்தர் என்ற பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இனி தமிழக முதல்வர் தான் பல்கலைக்கழக வேந்தர். இவ்வாறு வழக்கறிஞர் வில்சன் கூறினார்.