Skip to content
Home » தமிழக கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என்​.ர​வியின் பதவிக் ​காலம் கடந்​தாண்டு முடிவடைந்த நிலை​யில், பதவி நீட்​டிப்பு செய்​யப்​பட​வில்லை. விதி​கள்படி புதிய ஆளுநர் பதவி​யேற்​கும் வரை, ஏற்கெனவே உள்ள ஆளுநர் தொடருவார் என்பதால், அவர் ஆளுநராக உள்ளார். இந்நிலை​யில், நேற்று ஆளுநர் ரவி டில்லி புறப்​பட்டு சென்​றார். அவருடன் ஆளுநரின் செயலர், பாது​காப்பு அலுவலர்கள் சென்​றுள்​ளனர். தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்​.ர​வி திடீரென்று டில்லி பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.