தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியரகம் அருகே இன்று நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் ம.ப. சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டுள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 ஐ ரத்து செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த குடிகாரர்களுக்கும் குடிகார குடும்பத்தினருக்கும் 10
லட்சமும், மருத்துவ செலவுக்கு தலா 50 ஆயிரமும் வழங்கி குடிகாரர்களை ஊக்கப்படுத்துவதை கண்டித்தும்.
வேளாண் மக்கள் வயலில் வேலை செய்யும் போது இடி மின்னல் தாக்கியும், மின்சாரம் தாக்கியும், விஷ கடியாலும், வனவிலங்குகளால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு திருவிழாவிலும், சாலை விபத்துகளிலும் ஆறு, ஏரி, குளம், கிணறுகளில் எதிர்பாராமல் மரணம் அடைந்தவர்களுக்கும் பட்டாசு தொழிற்சாலைகளில் சாலை விபத்துகளிலும் மரணமுற்ற அனைத்து குடும்பத்தினருக்கும் 10 லட்சத்திற்கும் குறையாமல் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும்.
ஆறு ஏரி குளம் குட்டை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் பொது சொத்துக்களையும் பஞ்சமி நிலத்தையும் நில கொள்ளையர்கள் இடம் இருந்து பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.