முதல்வரிடம் முறையிட்டும் 50 நாட்களாக திருமண்டங்கு கரும்பு விவசாயிகள் பிரச்சனை தீரவில்லை. இதை கண்டித்து வரும் 21 ம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநிலம் முழுவதும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது…தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடியிலும், கடலுார் மாவட்டம் சித்துாரில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை, கடந்த 2019ம் ஆண்டு அரவை பணிகள் இல்லாமல் மூடி கிடக்கிறது. இதற்கு காரணம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் 112 கோடி ரூபாய் நிலுவை தொகையை கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முதல்வரிடம் முறையிட்டும் 50 நாட்களாக விவசாயிகள் பிரச்சனை தீரவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கண்டுக்கொள்ளாத மாநில அரசை கண்டித்தும், வரும் ஜன.21 ம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநிலம் முழுவதும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
எனவே, முதல்வர் உடனடியாக தலையிட்டு, வட்டியுடன் நிலுவை தொகை வழங்கவும், கடன் பிரச்சனையிலும் தீர்வு காண வேண்டும். மேலும், ஆலையை கூட்டுறவு துறை மூலம் மாநில அரசை நடத்த வேண்டும். இந்நிலையில் ரத்தசோகை, இரும்பு சத்து குறைப்பாடுகளை போக்குவதற்காக அரிசியை செறிவூட்டி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ள போதிலும், மாநில அரசு அதை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.