இலங்கை சிறையில் இருக்கும் 26 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி ராமநாதபுரம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். மீனவர்களை விடுவித்து தமிழ்நாடு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது.தமிழ்நாடு மீனவர்களும் இந்திய குடிமக்களே, அவர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது என கூறி வழக்கை முடித்துவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.