கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து சுமார் 200 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அதில் 2 படகுகளில் வந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் இலங்கை கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன்பிறகு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அந்த வழக்கு ஆனது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஊர் காவல்த்துறை நீதிமன்ற நீதிபதி, இனி மீனவர்கள் யாரும் இலங்கை கடற்பகுதிக்குள் வரக்கூடாது. மீறி நுழையும் பட்சத்தில் 1 வருடம் முதல் 3 வருடம் வரை நெடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, தற்போது கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை ஊர் காவல்த்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.