தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதும் அடிக்கடி அரங்கேறி வருகிறது. எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்களை சிறைபிடித்துச் செல்வதும், மீனவர்களின் படகுகளை நாட்டுடைமை ஆக்குவதும், மீன்களை பறிமுதல் செய்வதும் இலங்கை கடற்படையின் செயல் என்றால், மீனவர்களின் படகுகள், வலைகளை சேதப்படுத்துவது, செல்போன் உள்ளிட்ட உபகரணங்கள், மீன்கள், வலைகளை கொள்ளையடித்துச் செல்வது, மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கடற்கொள்ளையர்களின் செயலாக இருந்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வரும் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதேபோல் பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
இதனையடுத்து உடனடியாக சக மீனவர்கள், 4 மீனவர்களையும் மீட்டு வேறொரு படகில் கரைக்குத் திரும்பினர். காயமடைந்த கார்த்தி, சண்முகம், ராமையன், தேவராஜ் ஆகிய 4 மீனவர்களும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல்குழும போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.