தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். எனவே புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜூவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர், 1990ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இன்ஜினீயரிங் படித்தவர். தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்தரகாண்டின் தாய்மொழியான குமானி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவான என்.சி.பி, திருச்சி போலீஸ் கமிஷனர், உளவுப்பிரிவில் டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி, சிறப்பு
அதிரடிப்படை ஏ.டி.ஜி.பி ஆகிய முக்கியப்பதவிகளில் சங்கர் ஜூவால் பணியாற்றியவர். அயல்பணியாக மத்திய அரசில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். பிறகு தமிழக அதிரடிப்படை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார். இரு முறை ஜனாதிபதி பதக்கம் பெற்றியிருக்கிறார். இன்ஜினீயரிங் படிப்பைப் முடித்ததும் சிறிது காலம் நிறுவனங்களில் இன்ஜினீயராக பணியாற்றினார். அதன் பின்பு ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வானார். சங்கர் ஜீவால் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டதையடுத்து.. சென்னை போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்..