Skip to content

தமிழகத்தில் பாஜக டெபாசிட் இழக்கும்.. நாகையில் திருமுருகன் காந்தி…

மே 17, இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று நாகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், இம்முறை பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், மதவாத பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தங்களது பரப்புரை இருக்கும் என்றும், தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்றும் அதே சமயத்தில் அவர்கள் டெபாசிட் இழப்பார்கள் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் பாஜகவை தேர்ந்தெடுக்கும் நிலையில் தமிழர்கள் இல்லை என்றும், இந்திய அளவில் பாஜகவுக்கு போதிய இடம் கிடைப்பதில் ஐயம் இருப்பதாக அவர் கூறினார். கடலுக்கு அடியில் தவம் செய்தாலும் மோடி அரசு இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும் மோடி சர்க்கார் பெரும் தோல்வியை எதிர்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக எதிர்ப்புடன் எல்லா கட்சிகளும் இருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி என்றும், இம்முறை மே 17 இயக்கம், கட்சி பாராமல் நல்ல வேட்பாளர்களுக்கு மட்டுமே ஆதரவை அளித்து அவர்களுக்காக களத்தில் வேலை செய்வோம் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் அறிக்கை மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை இறுதியை எட்டிய பின்னரே, யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை மே 17 இயக்கம் நிச்சயம் தெரிவிக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!