மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலும் வர உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை அண்மையில் சந்தித்து தேர்தல் வியூகம் குறித்து ஆலோசித்தார். இந்நிலையில், 2024 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிற மாநில சட்டமன்றத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் மாநிலத் தலைவர்களை மாற்ற காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாடு, டில்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க பலர் டில்லிக்கு படையெடுக்க தயாராகி வருகிறார்கள்.
சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மற்றும் சில எம்.பிக்கள் தலைவர் பதவியை குறிவைத்து காய் நகர்த்துகிறார்கள்.