Skip to content
Home » அதிக திறனுடைய 2 நிலக்கரி கையாளும் மிஷின்… முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்…

அதிக திறனுடைய 2 நிலக்கரி கையாளும் மிஷின்… முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்…

  • by Senthil

எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தூத்துக்குடி துறைமுகம் தளம்-1-ல் புதிதாக 325 கோடி ரூபாய் செலவில்  அதிக திறன் கொண்ட நிலக்கரி கையாளும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது.

இந்த இயந்திரங்களின் (Shore Unloader) செயல்பாடுகளை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்,   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்  பி. கீதா ஜீவன்,  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர்  வெ.இறையன்பு,  எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா,  இயக்குநர் (பகிர்மானம்)  மா.சிவலிங்கராஜன், இயக்குநர் (உற்பத்தி)  த.ராசேந்திரன், இயக்குநர் (திட்டங்கள்)  மா.ராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினை,  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்று புத்தகம் பரிசளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!