நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் கட்டுப்பாட்டிலுள்ள 9 கோட்டங்களுக்கு 9 DGPS (Digital Global Positioning System) கருவிகளையும், 214 கையடக்க GPS கருவிளையும் நீர்வளத்துறை திட்ட உருவாக்கப் பொறியாளர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதன் அடையாளமாக சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் 5 பொறியாளர்களுக்கு அக்கருவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா நீர்வளத்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் அ. முத்தையா, நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் தலைமைப் பொறியாளர் க. பொன்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காலநிலை மாற்றம் மற்றும் வனத்தறையின் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வனம் மற்றும் வனஉயரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவினை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2023 அறிக்கையை வௌியிட்டார்.