Skip to content

தமிழக பட்ஜெட் தாக்கல்- அதிமுக அமளி, வெளிநடப்பு

2025-26ம் ஆண்டுக்கான  தமிழக அரசின்   பட்ஜெட் தாக்கல்  செய்வதற்கான  சட்டமன்ற கூட்டம் இன்று காலை  9.30 மணிக்கு  தொடங்கியது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  காலை 9.10 மணிக்கு சட்டமன்றத்துக்கு வந்தார்.  அவரை  அமைச்சர்கள் மற்றும்  டிஜிபி  சங்கர் ஜிவால்  மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். முதல்வர் சிறிது நேரம்  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் ஆலோசனை நடத்தினார்.

அதற்கு முன்னதாகவே எம்.எல்.ஏக்கள் வரத் தொடங்கினர்.   எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது அறையில்   கட்சி உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

சபாநாயகர்  அப்பாவு, முன்னதாக தனது  அறைக்கு வந்து அமர்ந்திருந்தார். சரியாக 9.29 மணிக்கு அவர்  சட்டமன்றத்துக்குள் வந்தார். அதைத்தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று  வணக்கம் தெரிவித்தனர். சபாநாயகரும் அனைவருக்கும்  வணக்கம் கூறினார்.

அதைத்தொடர்ந்து சரியாக 9.30 மணிக்கு  சபாநாயகர் திருக்குறளை கூறி ,  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி  கூறினார்.  அதைத்தொடர்ந்து சபை நடவடிக்கைகள் தொடங்கியது.  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலையை வாசிக்க  சபாநாயகர்  அழைத்தார்.

அப்போது  எதிர்க்கட்சித்தலைவர்  எடப்பாடி பழனிசாமி, எழுந்து சபாநாயகரிடம் எதோ  சொல்ல முயன்றார். அவரை உட்காரும்படி  சபாநாயகர் கூறினார்.  ஆனால் அதை பொருட்படுத்தாமல் அதிமுகவினர்  அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்  நிதி அமைச்சர்  பட்ஜெட் தாக்கல் செய்தார். இடையிடையே சபாநாயகர்  அமைதியாக இருக்கும்படி  அதிமுகவினரிடம் கூறினார்.  ஆனாலும் எடப்பாடி உள்ளிட்ட  அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.  பின்னர்  அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பட்ஜெட்டில்  நிதி அமைச்சர் கூறியதாவது:

இந்தியாவின் 2 வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு எத்தனை தடைகள் வந்தாலும்  தமிழ்நாட்டைசமநிலை தவறாமல் வழிநடத்துவோம்  100 ஆண்டுகளுக்கு முன்பே  தமிழகத்தில் விதைக்கப்பட்ட   விதையால் இன்று கல்வி, வேளாண்மை, சுகாதாரத்தில் நாம் சிறந்து விளங்குகிறோம்.  வறுமை ஒழிப்பே நமது இலக்கு.  என்று தொடர்ந்து பட்ஜெட்டை படித்து வருகிறார்.

பட்ஜெட் அறிவிப்புகளை தமிழக மக்கள்  உடனே அறிந்து கொள்ளும் வகையில்  சென்னையில் 100 இடங்கள் உள்பட தமிழநாடு முழுவதும் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மக்கள்  அனைத்து இடங்களிலும் கூட்டமாக நின்று  பட்ஜெட் விவரங்களை அறிந்து கொண்டனர்.

error: Content is protected !!