2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இதையொட்டி இன்று காலை 8.30 மணி அளவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞர் நினைவிடம் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் எல்லாருக்கும் எல்லாம் என்ற வகையில் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது . எந்த ஒரு தேசிய சின்னத்தையும் குறைத்து மதிப்பிடவில்லை. இந்த பட்ஜெட் தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்டாக இருக்கும்’ என்றார்.
இந்த நிலையில் காலை 8.45 மணிக்கே அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்ற வளாகம் வந்தனர். அங்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறையில் அதிமுகவினர் ஆலோசனை நடத்தினர்.அநேகமாக அவர்கள் வெளிநடப்பு செய்வது குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.
பட்ஜெட் தாக்கலின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் நாளை வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.